Monday, August 13, 2007

நிலமகள்...

நான் மன்னை தொட்ட நொடியில்
நின் மடியில் வாங்கிக் கொண்டாய்
உயிர் உடலைப் பிரிந்து போனாலும்
என் உடலைப் புதைத்துக் கொள்வாய்.
நஞ்சை இன்றி போனாலும்
என் வாஞ்சை உன் மேல் மாறாது
நதிகள் வற்றிப் போனாலும்
என் நேசம் உன் மேல் மாறாது
உயர் பன்பு என்றும் குறையாது
தழல் வீரம் என்றும் மறையாது
துன்பம் பல நீ சுமந்து நின்றாலும்
அன்பை அளவின்றி அள்ளித் தெளிக்கும்
நின் மடியில் வாழ்வதற் கினையேது.

1 comment:

K.Samraj said...

To see tamil words in blogger ...............i so feel happy ................